Product Description
விகடன் பிரசுரம்
ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்… ரசிக்கலாம்… ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்!
ரூ.50/-
Reviews
There are no reviews yet.