Description
கையடக்கமாக, ரயிலிலும் பஸ்ஸிலும் பயணித்துக் கொண்டே படித்து முடிக்க வசதியாக ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ விகடன் பிரசுரமாக வெளியானபோது அது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ‘எங்கும் வேகம்; எதிலும் அவசரம்’ என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ புத்தகம். ‘அளவில் சிறியது என்றாலும் அடக்கத்தில் வெயிட்டானது தான் ஒவ்வொரு கதையும்…’ _ இப்படி வாசகர்களிடமிருந்து வந்தவண்ணம் இருக்கும் பாராட்டுக் கடிதங்கள், ஆனந்த விகடனில் வெளியான மற்ற ஒரு நிமிடக் கதைகளையும் நூல் வடிவில் வெளியிடவேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது! இதோ, உங்கள் கையில் தவழ்வது ‘108 ஒரு நிமிடக் கதைகள்!’ அடுத்த முறை நீங்கள் பயணம் செய்யும்போது படிப்பதற்கு வசதியாக இன்னொரு கையடக்க நூல் இது! படித்து இன்புறுங்கள்!
ரூ.55/-
Reviews
There are no reviews yet.