Product Description
எஸ்.ராஜகுமாரன்
‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்… என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள்? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்ன? அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன? சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன? சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா? என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல். 27 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர
ரூ.100/-
Reviews
There are no reviews yet.