ரூ.500/- அழகிய பெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக்கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உருவாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத்திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டையோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது. இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகிய பெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத்தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகிய பெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு. – சி. மோகன்
இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்த மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையர் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன். இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி. – அழகிய பெரியவன் ரூ.70/-