இரவு பகலான கதை

ஆயிஷா இரா.நடராசன் “ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான்.பொங்கும் புகையுடன் தீப்பந்தம்,மெழுகுவர்த்தி,அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா.நடராசன்,வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.” ரூ.45/-

மரபியல்

ஆயிஷா இரா.நடராசன் “அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின்100க்கு100தகவல்கள்.மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஆயிஷா இரா.நடராசன் “இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும்,நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார்.அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.” ரூ.80/-

100க்கு100அறிவியல் நேனோ தொழில்நுட்பம்

ஆயிஷா இரா.நடராசன் “ஒரு குண்டூசி முனைக்குள் முழு பிரிட்டானியா களைக்களஞ்சியத்தையே அடக்கியது ஒரு தொடக்கமே.முழு உலகையே ஒரு முற்றுப் புள்ளிக்குள் கொண்டு வர துடிக்கும் நேனோ தொழில் நுட்பம் குறித்த100க்கு100தகவல்கள்.நேனோ தொழில்நுட்பம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

ஹிக்ஸ்போஸான் வரை(இயற்பியலின் கதை)

ஆயிஷா இரா.நடராசன் “இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறியதே இயற்பியல்.இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை ஆயிஷா இரா.நடராசன் வாசகர்களுக்கு உவப்பான ஒருவித மொழி நடையில் புதினம் போல விவரித்து செல்லும் பாங்கு அலாதியானது.இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் ரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.” ரூ.100/-

வரலாறு மறந்த விஞ்ஞானிகள்

ஆயிஷா இரா.நடராசன் “மனித சமூகம் புதிரானது.புவியின் புன்னகை விடுகதை போன்றது.சரித்திரம் இருக்கிறதே அதன் மௌனமான மர்மத்தின் முன் எத்தனையோ பலிகள்.தன் வாழ்நாளெல்லாம் அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டு அதன் பலனை எதிர்பார்க்காமல் மறைந்து போன பல சாதனை விஞ்ஞானிகள் பற்றி இந்நூல் விவரிக்கிறது.” ரூ.50/-

ஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள்

ஆயிஷா இரா.நடராசன் “இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.” ரூ.50/-

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ஆயிஷா இரா.நடராசன் மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார். ரூ.30/-