ஆர். அபிலாஷ் நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ரூ.80/-
ஆர். அபிலாஷ் புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ‘முகமூடி’ வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது. ரூ.250/-
ஆர். அபிலாஷ் அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைகளையும் அனுபவங்களையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடியவை. ஆர்.அபிலாஷ் இந்தத் தொகுப்பில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 நவீன ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இயற்கையின், மனித இருப்பின் எண்ணற்ற ரகசியங்களைத் தொட்டுச் செல்லும் இக்கவிதைகள் ஹைக்கூ என்ற வடிவத்தின் மகத்தான அழகியலை வாசகர்கள் முன் படைக்கின்றன. ரூ.75/-
ஆர். அபிலாஷ் கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக்கொள்பவனின் கதை இது. இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. ரூ.350/-