இடம்-காலம்-சொல்

இந்திரஜித் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங்குகளை இந்திரஜித் தந்து, அங்கதப் பார்வையின் மூலம் இரக்கமின்றிக் கலைத்துவிடுகிறார். உட்பொருளும் மௌனங்களும் நிறைந்த இந்திரஜித்தின் பாய்ந்துசெல்லும் எழுத்துமுறை இவரை மிகமுக்கியமான நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவுகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒரு சமூகத்தின் அரசியல்-பண்பாட்டு உளவியலை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான பல்வேறு திறப்புகளைத் தருகிறது. ரூ.90/-

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

இந்திரஜித் இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அடையக்கூடிய அர்த்தமற்ற அபத்த கணங்களைப் பற்றிய அங்கதம் மிகுந்த சித்தரிப்பினை வழங்குகின்றன. நவீன கவிதைக்குள் இந்திரஜித் ஒரு புதிய உணர்வுத்தளத்தை உருவாக்குகிறார். ரூ.50/-

புதிதாக இரண்டு முகங்கள்

இந்திரஜித் சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனைகளைக் கலைக்க விழைகின்றன. மனச் சோர்வுடன் அவற்றிலிருந்து விலகிச் செல்கின்றன. மிகுந்த வடிவ நேர்த்தியும் கச்சிதமும் கொண்ட இந்திரஜித்தின் கதைகள் நவீன புனைவியலாளர்களில் அவரை தனித்துவமுடன் இனம் காட்டுகிறது. ரூ.50/-