தமிழ் நிலமும் இனமும்?

இலா.வின்சென்ட் இன்று தொல்லியனும் மானிடவியலும் வளர்ச்சியுற்ற நிலையில்,தமிழர்தம் பண்டைய வரலாறு குறித்த புதிய தரவுகள் கிட்டியுள்ளன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழரின் பண்டைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி தொடங்கியுள்ளது.அதன் ஓரங்கமாக திரு.இலா.வின்சென்ட் அவர்களின் இந்நூலும் உருப்பெற்றுள்ளார்.ஒவ்வொரு இயலில் இறுதியிலும் அதன் பொழிவாக செய்திகளைத் தொகுத்தளித்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது.உணர்ச்சி சாராது,தாம் படித்த,தாம் நம்பும் தரவுகளின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியுள்ளார்.அவரது கருத்துக்களுடன் மாறுபாடு கொள்வோரும் இவ்வுண்மையை ஏற்பர் என்றே நம்புகிறேன். நூலைப் படிப்போம்.சிந்திப்போம்.விவாதிப்போம்.ஆ.சிவசுப்பிரமணியன்,தூத்துக்குடி.இலா.வின்செட் அவர்களின் தமிழ் நிலமும் இனமும்,பல நூற்றாண்டு கால நம்பிக்கைகளின் மீது,மறுபார்வை வேண்டுகிறது.எவரையும்,எந்தக் கோட்பாட்டையும் வெல்லும் பூடகம் அவர்க்கு இல்லை.அவர் இங்கே யுத்தக்கருவியோடு நிற்கவில்லை.உடல் தெரியும் கந்தலோடும் முகம் முழுகக் கண்ணீரோடும் உள்ள அபலையைப் போல ஆயிரம் அய்யங்களைக் கையிலேந்தி நிற்கிறார்.இவற்றைப் புறக்கணிப்பது அறிவுடைமை ஆகாது.தமிழ் கூறும் நல்லுலக அறிஞர்களின் கடமை,இந்நூல் எழுப்பும் அய்யங்களுக்கு விடை இறுப்பதே.கவிஞர் தமிழ்நாடன் சேலம் ரூ.100/-