எம் தமிழர் செய்த படம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது ரூ.100/-

கமல் நம் காலத்து நாயகன்

மணா தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப் பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்முடன் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம். ரூ.350/-

திரைக்கதை எழுதுவது எப்படி?

சுஜாதா திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்) ரூ.120/-

கு.அழகிரி சாமி கடிதங்கள்

கி. ராஜநாராயணன் கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த ‘கு. அழகிரிசாமி கடிதங்கள்’ தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்து மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன. ரூ.140/-

காற்று கொணர்ந்த கடிதங்கள்

தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.40/-

அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

கி. ராஜநாராயணன் தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா. ரூ.190/-

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்

ரசிகமணி டி.கே.சி ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுபவை. ரசிகமணி அவரது வாழ்நாளில் 26 பேருக்கு எழுதிய கடிதங்களின் முழுத்தொகுப்பு தமிழில் முதன்முதலாக வெளிவருகிறது. ஒவ்வொரு இலக்கிய வாசகனின் கையிலும் இருக்க வேண்டிய அரிய கலைக்களஞ்சியம் இது. ரூ.600/-

ஐராபாசீ

வேலு சரவணன் நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம். ரூ.75/-

கால் முளைத்த கதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.130/-

புதிய நீதிக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. ரூ.120/-