காமரூப கதைகள்

சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிஅச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது. ரூ. 290/-

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி

மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான், கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியச்சூழலோடு ஏற்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி

நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணன் 2005 வரை எழுதிய 90 கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு. ரூ.630/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-

செல்லுலாய்ட் சித்திரங்கள்

தமிழ்மகன் 90-களின் சினிமா பிரபலங்கள் குறித்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. ஆசிரியருக்கும் சினிமா பிரபலத்துக்குமான நேரடியான அனுபவம் நேர்மையான சான்றாக இருக்கிறது. ரூ.100/-

மானுடப் பண்ணை

தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது. ரூ.160/- உயிர்மை பதிப்பகம்