ஆசிரியர் – ராஜ் மோகன் சினிமா விலை- 200 இன்று வரை தலைசிறந்த பத்து படங்களுல் ஒன்றாக விமர்சகர்களால் உல்கம் முழுக்க கொண்டாடப்படும் காட்பாதர் படத்தின் திரைக்கதை நூல் விறுவிறுப்பான காட்சிகளுடன் மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு நம் கண்முன் அசலாக நிகழ்வது போன்ற காட்சி சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் திரைக்கதை ரசிகர்களுக்கு கொடை
உலக சினிமா வரலாறு, பாகம் II ஆசிரியர்- அஜயன் பாலா சினிமா விலை -260 1929 –முதல் 1972 வரை உல்க சினிமாவின் போக்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்,பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலிய சினிமாக்களின் புதிய அலை இயக்குனர்களால் சினிமாவுக்குள் உண்டான புதிய எழுச்சி . ஜான் போர்ட் , ஹிட்ச்காக், சத்யஜித்ரே, அகிராகுரசேவா, இங்மர்பெர்க்மன்,பெலினி, போன்ற உல்க சினிமாவை பாதித்த ஆளுமைகளின் வரலாறு அவர்கள் படங்கள் குறித்த ஆயுவுகளை உல்க வரலாற்றின் பின்புலத்துடன் அலசும் அரிய நூல்
உலக சினிமா வரலாறு, பாகம் 1 ஆசிரியர்- அஜயன் பாலா/ சினிமா/ விலை -160 1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்