மூன்று ஆண்டுகள்

அந்தோன் சேகவ் “மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா  அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?” ரூ.90/-

மூன்றாவது துளுக்கு

மயூரா ரத்தினசாமி எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சியூட்டும் இசங்களோ இருப்பதில்லை. ரூ.130/-

மூன்றாவது சிருஷ்டி

கௌதம சித்தார்த்தன் பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது. போர்ஹே வீசியெறிந்த  நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது. அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா? இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா? ரூ.120/-

மறுபடியும்

கனகராஜன் மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்… ரூ.70/-

மர நிறப் பட்டாம்பூச்சி

கார்த்திகைப்பாண்டியனிடம் கவனிக்கத்தக்க விஷயம் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி நடை. மிகுந்த நாடக வாய்ப்புகள்  உள்ள  தருணங்களை கூட ஒரு பொறியாளருக்கே உரிய கூர்மையுடன் விவரித்துச் செல்கிற பாங்கு. நம் மென் உணர்வுகளை வருடிக் கொடுக்க வளையாத முரட்டுத்தனம். -போகன் சங்கர் ரூ.140/-

பொம்மக்கா

கௌதம சித்தார்த்தன் “பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள்  இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித்தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன்,மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைவிடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை,ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச்சாலடிக்கிறது. ரூ.140/-

பிலோமி டீச்சர்

வா.மு.கோமு காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான். ரூ.180/-

பச்சைப்  பறவை

  கௌதம சித்தார்த்தன் அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள். வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான், அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும். ரூ.130

தவளைகள் குதிக்கும் வயிறு

வா.மு.கோமு தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது. ரூ.230/-

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு. ரூ.140/-