சித்திரப்புலி

எஸ். செந்தில் குமார் விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களின் முன்பு. கசப்பின் சுவையைக் கொண்ட வரிகளுக்குப் பின்னால், நின்று பார்க்கும் கதாபாத்திரங்கள் சில வேளைகளில் வெளியேறி வந்து வரிகளுக்கு முன் நின்று கொண்டு சிரிக்கிறார்கள். கையை விட்டுச் சென்ற கடந்த காலத்தின் மகிழ்வினாலான தருணங்கள் திரும்பவும் வந்தடையாதா என்று ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள். இக்கதைகளுக்குப் பின்னால் இருக்கும் வெளிச்சங்களும், இருளும் மேலும் புனைவாக்கப்பட்டிருக்கிறது என்பது கதைகளின் செயல் வடிவம் சார்ந்து சாத்தியமானது. ரூ.80/-

வெய்யில் உலர்த்திய வீடு

எஸ். செந்தில் குமார் தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப் புள்ளியிலிருந்து விலகி அனுபவங்களின் குழம்பிய வண்ணங்களைக் காட்சிப் படுத்துகின்றன. ரூ.75/-

ஜீ.சௌந்தரராஜனின் கதை

எஸ். செந்தில் குமார் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை மறைத்துக் கொண்டுதான் ஜீ. சௌந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரூ.90/-