தளும்பல்

சு. கி. ஜெயகரன் வெவ்வேறு காலகட்டங்களில் சு.கி.ஜெயகரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றியும் லெமூரியா எனும் ஆரியப் புனைவு மற்றும் குமரிக்கண்ட கோட்பாடு பற்றியும், அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகளான காம்பே வளைகுடா புராதனச் சிதைவுகள், பேரூர் மண்ணோடுகள் பற்றியும் இந்நூல் கேள்விகளை எழுப்புகிறது. கவிதைகளில் துவங்கி காவியக்காலம் பற்றிய ஆய்வில் முடியும் இத்தொகுப்பு, தமிழ் மொழி மற்றும் தமிழ் சார்ந்த கலாச்சாரம் குறித்த ஒரு புதிய பரிமாணத்தைக் காண வழிகோலுகின்றன. ரூ.60/-

பூமித் தின்னிகள்

காஞ்சனா தாமோதரன் தமிழ்வாசகர்களால் ஒரு கதாசிரியராக அறியப்பட்ட காஞ்சனா தாமோதரன், பல தமிழ் இதழ்களிலும், இணைய தளங்களிலும் அவ்வப்போது வெளியான தனது கட்டுரைகளை இப்புத்தகத்தில் தொகுத்தளிக்கின்றார். இவை பரவலான வாசிப்பிற்காக எழுதப்பட்டவை என்கிறார் நூலாசிரியர். கட்டுரைகளின் வெளியும் அகன்று இருக்கின்றது. இலக்கிய விமர்சனங்கள், சமூகக் கரிசனங்கள், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறைகள், இராக் போர், ஐரோப்பிய கலை வரலாறு என ஆசிரியரின் வீச்சு பரந்திருக்கின்றது. (சு. தியடோர் பாஸ்கரன்) ரூ.125/-

அது அந்தக் காலம்

எஸ். வி. ராமகிருஷ்ணன் ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதிலுள்ள வரலாறு நகமும் ரத்தமும் சதையுமுடைய மனிதர்களை உள்ளடக்கியது. இதிலுள்ள மனிதர்களுக்குப் பிரதிபலிப்பாக இன்றும் இருக்கிறார்கள். (அசோகமித்திரன்) ரூ.60/-

பார்வைகளும் பதிவுகளும்

வாஸந்தி அரசியல் நெருக்கடி மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்தியா டுடே இதழில் வாஸந்தி எழுதிய இக்கட்டுரைகள் சுயமான சிந்தனையும் துணிச்சலான பார்வையும் கொண்டவை. கலை, கலாச்சாரம், அரசியல் எனப் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் இக்கட்டுரைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. ரூ.110/-

எப்போதும் வாழும் கோடை

மனுஷ்ய புத்திரன் நவீனக் கவிதை தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரைகள், மதிப்புரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆத்மாநாம், சுகுமாரன், பிரமிள், கலாப்ரியா, சி.மணி உள்ளிட்ட பலரது படைப்புலகம் குறித்த பரிசீலனைகள் முன்வைக்கப்படுகின்றன. ரூ.50/-

காத்திருந்த வேளையில்

மனுஷ்ய புத்திரன் கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாளராக வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் தொகுப்பு. அம்பலம் இணைய இதழில் பத்திகளாக வெளிவந்த இக்கட்டுரைகள் சமூக, இலக்கிய நிகழ்வுகள் பற்றிக் கூர்மையும் அங்கதமும் கொண்ட பார்வைகளை முன்வைக்கின்றன. ரூ.65/-

எழுத்தும் வாழ்க்கையும்

சுஜாதா இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெற்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கின்றன. இருந்தும் இக்கட்டுரைகளின் புத்தக வடிவத்திற்கு ஒரு தேவை இருப்பது, இணையம் எந்த நாளும் அச்சிட்ட புத்தகத்தை இடம் பெயர்க்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது. ரூ.120/-

பூமியின் பாதி வயது

அ.முத்துலிங்கம் நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள். வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறிய அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம் பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரமாண்டமான காலத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவிற்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாக அழித்துவிடும் முத்துலிங்கம் தான் தொடுகிற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார். ரூ.160/-

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது

அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இருபது தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை முன் வைக்கிறார்கள். சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை விரியும் இந்த நூல் ஒரு தலைசிறந்த இலக்கிய அறிமுகம் மட்டுமல்ல, தீவிர விமர்சனத் தொகுப்பாகவும் திகழ்கிறது. ரூ.85/-

வார்த்தையின் ரஸவாதம்

பிரம்மராஜன் இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதாரிகளிடமிருந்து தப்பி வருவதற்கான வழியும்கூட, கழிவு அல்லது உபயோகமற்ற வஸ்துகள் புவிப்பரப்பு முழுவதும் மனிதமயத்தில் நிறைந்து வரும் வேளையில் எதிரானவற்றிலிருந்து சொல்லடுக்கை வார்த்தை வகைமையைத் தேர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும் கட்டுரைகள். ரூ.130/-