மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்

கழனியூரன் ‘நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக்கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது. ரூ.175/-

குறுஞ்சாமிகளின் கதைகள்

கழனியூரன் குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் ‘ஜனங்களின் சாமிகள்’ என்னும் பட்டியலில் அடங்குகின்றன. காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன. மானுடவியல், நாட்டாரியல், பண்பாட்டியியல் சார்ந்த ஆய்வுகளில் இக்குறுஞ்சாமிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. இக்குறுஞ்சாமிகளுக்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தோண்டிப் பார்த்தால் நமக்கு அரிய பல வாய் மொழி வரலாற்றுச் சான்றாதாரங்களும் அழகிய பல நாட்டார் கதையாடல்களும் காணக்கிடைக்கின்றன. ரூ.80/-