சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் தற்கால சாதியம்,இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன.இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல். ரூ.100/-

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

கௌதம சித்தார்த்தன் தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனைமெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில்ஒதுக்கி வைத்து, விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமானபொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது. அப்படியானஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளியதன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அந்த பிம்பத்தை ஞானமார்க்கத்தின் முதன்மையான கடவுளாக உருவேற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பதில் தீவிரமாய்  முனைந்தனர்.அந்தக் கட்டமைப்பு அப்போதைய தருணத்தில் தங்களது ஆதிக்கத்தை முன்வைப்பதற்காக அந்த பிம்பத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் காலச் சுழற்சியில்அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பமாக மாறுகிறது.அதிகாரமாக மாறுகிறது. அதிகாரத்தைத் தக்க வைக்கும்அரசியலாக மாறுகிறது. ரூ.40/-

சங்க கால சாதி அரசியல்

சங்க கால சாதி அரசியல் கௌதம சித்தார்த்தன் தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய்மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கிய உரையாசிரியர்கள் அள்ளிவிட்ட கருத்துப் பெட்டகங்கள்… போன்ற அச்சு வடிவம் பெற்ற ஆவணங்களை மாத்திரமே கணக்கில் எடுத்துக் கொண்டுதரவுகளை முன்வைக்கும் போக்குதான் இன்றளவிலும் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆய்வு அரசியல். பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது. விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று. ரூ.80/-

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

கௌதம சித்தார்த்தன் புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். ரூ.120/-

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல். ரூ.100/-

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவதில்லை . இதற்குப் பின்னால் உள்ளநுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிறபெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிறபெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. ரூ.130

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் “நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு? ரூ.90

மூன்றாவது சிருஷ்டி

கௌதம சித்தார்த்தன் பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது. போர்ஹே வீசியெறிந்த  நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது. அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா? இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா? ரூ.120/-

பொம்மக்கா

கௌதம சித்தார்த்தன் “பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள்  இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித்தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன்,மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைவிடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை,ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச்சாலடிக்கிறது. ரூ.140/-

பச்சைப்  பறவை

  கௌதம சித்தார்த்தன் அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள். வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான், அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும். ரூ.130