லீலை

சுகுமாரன் கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புக்கள் இவை.வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை. நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும், இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம். சுகுமாரன் முன்னுரையிலிருந்து. ரூ.100/-

தனிமையின் வழி

சுகுமாரன் அற உணர்விற்கும் குற்ற உணர்விற்கும் இடையேஎப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிம்மதியின்மையின் நெருப்பிலிருந்து பிறந்தவை சுகுமாரனின் இக்கட்டுரைகள். வதைபடுதல்கள், சுயநிந்தனைகள், குடித்துத் தீராத கசப்புகள், ஒருபோதும் பதில் இல்லாத கேள்விகள், ரகசியமாகத் துடைத்துக்கொண்ட கண்ணீர்த் துளிகள், நெகிழ்ச்சியின் விம்முதல்கள் என விரியும் இந்நூல் சுயமழிந்த குரலில் நவீன மனித இருப்பின் சஞ்சலங்களை எதிர்கொள்கின்றன. உரைநடையில் தனது கவித்துவத்தின் சலுகைகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாத சுகுமாரன், கவிதையின் தீராத துயரத்தை இக்கட்டுரைகளிலும் தொடர்ந்து செல்கிறார். ரூ.85/-

வெளிச்சம் தனிமையானது

சுகுமாரன் சுகுமாரன் தமிழ்ச் சூழலுக்கு வெளியே நிகழும் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் இவை. புறம் என்ற பிரிவில் மலையாளச் சூழல் சார்ந்த கட்டுரைகளும் அயல் என்ற தலைப்பில் பிற மொழி சார்ந்த ஆக்கங்களும் இடம்பெறுகின்றன. புதிய பின்னணிகளுக்காகவும் புதிய மொழியனுபவத்துக்காகவும் புதிய வாழ்க்கைக் கண்ணோட்டத்துக்காகவும் மேற் கொள்ளும் அக்கறைகளின் விளைவே இக்கட்டுரைகள். நம்மைப் புதிப்பித்துக்கொள்ளவும் நாம் எங்கே இருக்கிறோம் என்று சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த அக்கறை தேவையானது. அந்த வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. ரூ.120/-

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

சுகுமாரன் இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அணுகலைக் கொண்டவை. அதன் விரிவாக்கமாகவே பிற இலக்கிய வடிவங்களைப் பற்றிய நோக்கும் அமைந்திருக்கிறது தனிக்கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், மதிப்புரைகள், அனுபவப் பதிவுகள், குறிப்புகள் என்று வெவ்வேறு வடிவங்களில் இவை எழுதப்பட்டிருந்தாலும் இவற்றுக்கிடையில் ஒரு பொதுத்தன்மை இழையோடுகிறது. ஓர் இலக்கிய ஆர்வலன் தன்னைப் பாதித்த நிகழ்வுகளுடன் மேற்கொண்ட எதிர்வினை இவை. இலக்கிய அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் வடிவத்தைத் தொட்டு உணர முடியுமா என்று பார்க்கும் பேராசைதான் இக்கட்டுரைகளின் அடிப்படை. ரூ.100/-

வாழிய நிலனே

சுகுமாரன் சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் வழியாகவும் ஒரு ஆழமான படைப்பாளியின் இதயத்தின் வழியாகவும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுகுமாரனின் கச்சிதமான செறிவான உரைநடை எழுப்பும் துல்லியமான மனச்சித்திரங்களம் இந்தத் தொகுப்பு ஒரு சிறந்த உதாரணம். ரூ.115/-

பாப்லோ நெரூதா கவிதைகள்

சுகுமாரன் ‘இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்’ என்று எழுதினார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மகத்தான காதல்களையும் மாபெரும் தீவினைகளையும் பாடும் நெரூதாவின் கவிதைகள் கவிஞர் சுகுமாரனின் உக்கிரமான மொழியில் தமிழுக்கு வருகின்றன. நெரூதாவின் தேர்ந்தெடுத்த 100கவிதைகள், அவரது நோபல் பரிசு உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் நெரூதாவின் வாழ்வையும் கலையையும் பற்றிய ஆழமான பதிவுகளும் கொண்டது இத்தொகுப்பு. தமிழில் நெரூதாவின் உலகம் இவ்வளவு விரிவாகத் தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை. ரூ.120/-

நீருக்குக் கதவுகள் இல்லை

சுகுமாரன் ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழுதிச் செல்கின்றன. அவர் நம் அந்தரங்கத்திற்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்து உரையாடலின் மகத்துவம் மிக்க தருணங்களைத் திறககிறார். ரூ.70/-