முதற்கனல்

ஜெயமோகன்  ரூ.290/- மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது.

ஏழாம் உலகம்

ஜெயமோகன் ஒரு கனவு வழியாக ராமப்பனின் முகம் என்னுள் மீண்டபோது எழுந்த உத்வேகம் இந்நாவலை எழுத வைத்தது. இது ஒருவகை விடுதலை முயற்சி. என்னை அச்சுறுத்தி அருவருப்பூட்டிய ஓர் உலகு. இதன்மூலம் நானும் வாழும் உலகமாக ஆகிறது. ரூ.

நீலம் (பேப்பர் பேக்)

ஜெயமோகன்   நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை. ரூ.250/–

பனிமனிதன்

பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது.குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம். ஜெயமோகன் ரூ.200/-

ஊமைச்செந்நாய்

ஜெயமோகனின் சிறுகதை. ஆதிக்க மனோபாவம் கொண்ட ஒருவனிடம் அடிமையாய் கிடக்கும் மனிதனின் செயல்பாடுகளை, மனநிலையைச் சித்திரிக்கும் சிறுகதை. ரூ.160/-

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். -ஜெயமோகன் ரூ.780/-