தங்கர்பச்சான் செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம், மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செளிணிதுவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்ப்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவுசெய்யப் பயின்ற இக்கலைஞனுக்கு கதை சொல்வதன் வழியே தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்படுகின்றன. பிரேம் ரூ.210/-