தொலைந்துபோனவர்கள்

பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது. – சா.கந்தசாமி ரூ.150/-

ஊமைச்செந்நாய்

ஜெயமோகனின் சிறுகதை. ஆதிக்க மனோபாவம் கொண்ட ஒருவனிடம் அடிமையாய் கிடக்கும் மனிதனின் செயல்பாடுகளை, மனநிலையைச் சித்திரிக்கும் சிறுகதை. ரூ.160/-

வாக்குமூலம்

வாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்களைப் பற்றி பரவலான ஓர் அபிப்பிராயம்,  என் எல்லா நாவல்களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்-படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும். ரூ.75/-

வானம் வசப்படும்

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது. பிரபஞ்சன் ரூ.480/-

வண்ணநிலவன் சிறுகதைகள்

1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. Ôஎமிலி ஜோலாÕ எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது. -வண்ணநிலவன்   ரூ.550/-

வெளியில் ஒருவன்

முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதை போன்றது, நானும் வளர்ந்திருக் கிறேன், எனது எழுத்தும் வளர்ந்திருக்கிறது, இந்த மாற்றங் களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, முதல்தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்தது, ஆனால் புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரியவரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது, அந்த வகையில் நான் பாக்கியசாலி, இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்து வைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது. -எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.90/-

விலங்குப் பண்ணை

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன. ரூ.125/-

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். -ஜெயமோகன் ரூ.780/-

எஸ்தர்

1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். “பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்” என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார். அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது… எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. – வண்ணநிலவன் ரூ.90/-