ருசி

பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன். – பிரபஞ்சன் ரூ.180/-

மரி என்ற ஆட்டுக்குட்டி

குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

தபால்காரர் பொண்டாட்டி

அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும். – பிரபஞ்சன் ரூ.180/-

நாளைக்கும் வரும் கிளைகள்

பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை. ரூ.140/-

மானுடம் வெல்லும்

அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்-நாவலைக் குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சன் விலை ரூ.320/

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.130/-

வானம் வசப்படும்

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது. பிரபஞ்சன் ரூ.480/-