தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார். ரூ.70/- பிரமிள்
தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றியும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் மிக நுட்பமான அவதானிப்புகள் அடங்கிய கட்டுரைகள் இவை. இலக்கிய விமர்சனம் என்னும் துறை விமர்சனக் கோட்பாடுகளால் ஆனது என்பதையும் எப்படி இலக்கியம் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதையும் பயிற்றுவிப்பவை இக்கட்டுரைகள். -பிரமிள் ரூ.140/-