மணா எம். ஆர். ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்நூல் நம் காலத்தின் மாபெரும் எதிர்க்குரலாக விளங்கிய கலைஞனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாட்டுக் கருத்தியல்களை தனது மேடை நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் தீவிரமாகக் கொண்டு சென்ற எம். ஆர். ராதாவின் ஆளுமை பழமையையும் அறியாமையையும் எதிர்த்து நவீனத்துவத்தின் கலக சக்தியாக வெளிப்பட்டது. மணாவின் இந்த நூல் எம். ஆர். ராதாவின் வாழ்வையும் கலையையும் ஆதாரபூர்வமான தகவல்கள், அரிய புகைப்படங்கள், ராதாவிற்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் என அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை விரிந்த பார்வையுடன் முன்வைக்கிறது. ரூ.170/-
மணா தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப் பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்முடன் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம். ரூ.350/-
மணா மணா தீராநதியிலும் புதிய பார்வையிலும் முப்பது ஆளுமைகளுடன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என விரியும் இந்த உரையாடல்கள் அனுபவம் சார்ந்தும் கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன. ரூ.300/-
மணா தமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த விரிவான பதிவுகளை முன் வைக்கிறது இந்நூல். உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்தியப் பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழ் மண்ணின் பன்முகப் பண்பாட்டு வேர்களைத் தேடிச் செல்கிறது. ரூ.50/-
மணா மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள். ரூ.70/-
மணா இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம், மணா, தமிழ்நாட்டின் சில பெரும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் சாதனை என்று சொல்லத்தகும், சமூகத்தை முன்நகர்த்திய அவர்களின் அர்ப்பணிப்பைச் சொல்லுகிறார். நம் நன்றி மறந்த சுபாவங்களைச் சாடுகிறார். ஆனால் மிக மென்மையாக நம் கனவுகளை விஸ்தரிக்கிறார். நம் நல்ல சுபாவங்களை நீட்சி பெற வைத்திருக்கிறார். (பிரபஞ்சன்) ரூ.90/-
மணா கலை, இலக்கியம், அரசியல் துறைகளில் தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழும் பிரபல ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளைச் சித்தரிக்கும் இந்த நூல் குமுதத்தில் தொடராக வெளிவந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. மணாவின் சுவாரசியமான நடையில் அரிய தகவல்களுடன் எழுதப்பட்ட கட்டுரைகள். ரூ.90/-
மணா தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நிறைந்தவை. வெற்றி பெற்றவர்களின் வெளிச்சத்தில் எண்ணற்ற தோல்விகளின் இருள் மறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியல், திரைப்படம், சமூகம், இசை, நடனம் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பின்னே இருக்கும் உழைப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது இந்த நூல். ரூ.85/-
மணா குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் பாதைகளியும் தீர்மானிக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் தங்கள் குழந்தைமையின் அழியாச் சித்திரங்களை எழுதுகிறார்கள். அந்த சித்திரங்கள் வழியே உருவாகும் களங்கமற்ற பருவத்தின் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுபவை ரூ.75/-