நிழலற்ற பெருவெளி

தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில் எஸ்.அர்ஷியா மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது. ரூ.200/-

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது. ரூ.250/-

என் பெயர் பட்டேல் பை (லைஃப் ஆஃப் பை)

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?” ரூ.299/-

உலக மக்கள் வரலாறு

ஹரிஸ் ஹார்மன் தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் மனித சமூகத்தின் வரலாற்றை வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சொல்லும் சுவையான நூல். ரூ.1100

சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது. ரூ.170/-

நக்சல்பாரி முன்பும் பின்பும்

 சுனிதிகுமார் கோஷ் ரூ.350.00 இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது

பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் தமிழில்:  போப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. ரூ.200/-

ஃப்ராய்ட்

ஜோனத்தன் லியர் தமிழில்: ச. வின்சென்ட் மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். ரூ. 250.00

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீபன் ஹாக்கிங் தமிழில் : நலங்கிள்ளி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். ரூ.300.00