லா.ச.ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி

லா.ச.ராமாமிருதம் உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை உருவாக்குபவை இந்தக் கதைகள். அவை மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயரிடமுடியாத, வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் இரண்டாவது தொகுதியான இந்நூலில் அவரது 30 கதைகள் இடம்பெறுகின்றன. ரூ.300/-

லா.ச.ராமாமிருதம் கதைகள்-முதல் தொகுதி

லா.ச.ராமாமிருதம் ‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைகதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக லா.ச.ரா.வின் படைப்புகள் திகழ்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் முதலாவது தொகுதியான இந்நூலில் அவரது 36 கதைகள் இடம்பெறுகின்றன. ரூ.300/-

புத்ர

இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது. – லா.ச. ராமாமிருதம் ரூ.140/-