வறீதையா கான்ஸ்தந்தின் கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது. மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறு கட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன? ரூ.130/-
வறீதையா கான்ஸ்தந்தின் கடலை எழுதுதல்… கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம். கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இனம் புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை என்கிறது வறீதையாவின் பதிவு. ரூ.130/-