கப்’பஞ்சாயத்து:சாதியின் மற்றொரு கோரமுகம்

அசோகன் முத்துசாமி கட்டப் பஞ்சாயத்து தானே தெரியும் நமக்கு?அது என்ன’கப்’பஞ்சாயத்து?இங்கல்ல,ஹரியாணா,பஞ்சாப்,உ.பி,போன்ற வட மாநிலங்களில் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வரும்’கப்’பஞ்சாயத்துகள் சாதியத்தின் துருப்பிடித்த ஆயுதமேந்தி நிகழ்த்துகின்ற கோரச் செயல்களையும்,காதல் திருமணம் செய்து கொள்ளவோ,திருமணத்தின் மூலமாக சாதியை மறுக்கவோ,தலித்தாகப் பிறந்திருப்பின் உயர்சாதிப் பெண்ணை மணந்து கொள்ளவோ முடியாத ஒரு இருட்டு உலகத்தை இந்நூல் உணர்வுப்பூர்வமான மொழி நடையில் விவரிக்கிறது. ரூ.10/-

வரலாறு சமூகம் மற்றும் நில உறவுகள் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

தமிழில்:அசோகன் முத்துசாமி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு அதிகாரத்திற்கு வந்த உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய15கட்டுரைகளின் செறிவான தமி ழக்கம் இப்பிரதி.பொருள் முதல் வாதம்.உற்பத்தி முறை வார்க்கப்போராட்டம். ரூ.160/-