பூமியின் பாதி வயது

அ.முத்துலிங்கம் நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள். வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறிய அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம் பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரமாண்டமான காலத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவிற்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாக அழித்துவிடும் முத்துலிங்கம் தான் தொடுகிற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார். ரூ.160/-

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது

அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இருபது தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை முன் வைக்கிறார்கள். சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை விரியும் இந்த நூல் ஒரு தலைசிறந்த இலக்கிய அறிமுகம் மட்டுமல்ல, தீவிர விமர்சனத் தொகுப்பாகவும் திகழ்கிறது. ரூ.85/-

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

அ.முத்துலிங்கம் தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது. ரூ.170/-

நாடற்றவன்

2012இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்கமுடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர். – அ. முத்துலிங்கம் ரூ.225/-

அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

அ. முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. Ôஇன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே. – அ.முத்துலிங்கம் ரூ. 90/-  

அக்கா

எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான். – அ.முத்துலிங்கம் ரூ.90/-