மாறும் காட்சிகள்(ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்)

அ.ராமசாமி ரஜினிகாந்த் எண்ணும் நடிகர் திரைப்படத்தில் உலா வரும் பிம்பமாகவும் அப்பிம்பத்திற்காக எழுதப்பட்ட வசனங்களாலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல வகையானவை.மக்ாளாட்சித் தத்துவதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக மாறும் போக்கில் அந்தத் தாக்கங்கள் உண்டாக்கக் கூடிய விளைவுகள் பல தளத்தில் வினையாற்றக் கூடியவை.அவரே நேரடியாக அரசியலுக்கு வரவிட்டாலும் அவரது தாக்கத்தால் திரட்டப்படும் பெருங்கூட்டம் எத்தகைய தலைமையை அல்லது இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் எனபுரிந்து வைத்துக் கொள்வது நமது காலத்தின் தேவை ரூ.15/-

பிம்பங்கள் அடையாளங்கள்

அ. ராமசாமி வெகுசனப் பண்பாட்டிற்கும் வெகுசன ஊடகங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பரிசீலனைகளைத் தீவிரமாக முன்வைக்கிறது அ.ராமசாமியின் இந்நூல். அன்றாட வாழ்வின் கேளிக்கைகளுக்குள் ஊடுருவி நிற்கும் நுண் அதிகாரத்தையும் அரசியலையும் கட்டுடைக்கும் அ.ராமசாமி கிரிக்கெட், பட்டிமன்றம், சினிமாக்கலாச்சாரம், கிராம-நகரப் பண்பாட்டுமுரண்கள், பாடத்திட்ட அரசியல் என நம் காலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/-

நாயக்கர் காலம் (வரலாறும் இலக்கியமும்)

அ. ராமசாமி வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக இருக்க முடியும் என்பதை ஒத்துக்கொண்டு பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்தகைய ஆய்வுகள் ஒரு தேசத்தின் சமுதாய வரலாற்றை முழுமையாக்கப் பயன்படும். உலகநாடுகளின் இப்பொதுப் போக்கிலிருந்து தமிழ் விலகிச் செல்லவில்லை. கல்விப்புல ஆய்வு முறையியலின் அடிப்படையான கூறுகளை கலை இலக்கியத் திறனாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் பேரா.அ.ராமசாமியின் இந்த நூல் அத்தகையதொரு ஆய்வு நூலே. தமிழக வரலாற்றில் அதிகம் ஆய்வு செய்யப்படாத நாயக்கர்களின் காலத்தை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை முதன்மையான சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழகச் சமுதாய வரலாற்றை முழுமையாக்குவதற்குப் பயன்படும் பல முடிவுகளை முன் வைத்துள்ளது. ரூ.130/-

வேறு வேறு உலகங்கள்

அ. ராமசாமி தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த குழப்பங்கள் என நமது காலகட்டத்தின் மையமான நெருக்கடிகள் குறித்த தீவிரமான கேள்விகளை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. வெளிப்படையாக வேறுபட்டதாகத் தோன்றும் பிரச்சினைகளுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்புகளை அ.ராமசாமி தனது எழுத்துகளின் வழியே இனம்காண முற்படுவதன் விளைவே இந்த நூல். ரூ.75/-