பாலஸ்தீன்

எட்வர்ட் செய்த் தமிழில்: எஸ். அர்ஷியா ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர். தற்கொலைப்படை என்பது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அது, குறைகூற முடியாத அளவுக்கு நேரடியானதாக இருக்கின்றது. பல்லாண்டுகளாக, நெறியற்ற வழியில் நடத்தப்படுவதாலும், அதிகாரமின்மையாலும், நம்பிக்கையிழப்பின் மனக்கசப்பான முடிவினாலும், உளப்பூர்வமான வகையில் உருப்பெற்றத் திட்டமாக அது இருக்கின்றது என்பது, எனது கருத்து. ரூ.60

கரும்பலகை

எஸ்.அர்ஷியா பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை. ரூ.150/-

ஏழரைப் பங்காளி வகையறா

எஸ்.அர்ஷியா அர்ஷியாவின் முதல் நாவலான இந்த  “ஏழரைப்  பங்காளி வகையறா” தமிழ் – உருது முஸ்லிம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஒரு உணர்ச்சிச்  சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை ,மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கிக் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை – ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு- அழகாக காட்டுகிறது. அதனால் தான் இந்த நாவல் பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்படிருக்கிறது. -தி.சு.நடராசனின்  முன்னுரையிலிருந்து ரூ.300/-

அதிகாரம்

எஸ்.அர்ஷியா மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான். ஒரு எல்லை வரைவுக்குள் மட்டுமே அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதைத் தெரிந்தும், ஆபத்தான அதை விரிவுபடுத்த முனையும் அவன் பேராசை இலக்கற்றதாக இருக்கிறது. இதில் எந்தப்படிநிலையும் விலக்கல்ல. அதிகாரம் சுவைத்துப்பார்த்தவர்களுக்கு போதையானது. போதைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள். ரூ.180/-