கணிதத்தின் கதை

ஆயிஷா இரா.நடராசன் கணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும்.ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது,எண்கள் கணிதமாக மாறிய கதை,மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு,கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன்,கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது. ரூ.70/-

நம்பர் பூதம்

ஆயிஷா இரா.நடராசன் “ஜெர்மனியை சேர்ந்த இந்நூல் ஆசிரியர் அரசியல்,வாழ்வியல் குறித்து சுமார்250புத்தகங்களை எழுதியுள்ளார்.இவர் குழந்தைகளுக் காக எழுதிய நூல்தான் இது.இதுவரைக்கும்20மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.அற்புத உலகில் ஆலிஸ் என்ற நூலுக்கு இணையாக பேசப்பட்ட நூல் இது.கணக்கே பிடிக்காதவனின் கனவில் பூதம் வந்து கணக்கு சொல்லிக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்.” ரூ.90/-

உலகை மாற்றிய சமன்பாடுகள்

ஆயிஷா இரா.நடராசன் பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு முதல் நியூட்டனின் ஈர்ப்பு விசை,வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி,மாக்ஸ்வெலின் மின் காந்தவியல்,யுலர்,நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்த நுட்பமான விவரணைகளை ஆயிஷா.இரா.நடராசன் இந்நூலில் வாசகர்களுக்கு தந்துள்ளார். ரூ.40/-

கணித மேதைகளின் பேஸ்புக்

ஆயிஷா இரா.நடராசன் கி.மு. 624-546காலத்து மிலிட்டஸின் தாலஸ் முதல் கி.பி. 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பால் ஏர்டிஷ் வரையிலான100கணித மேதைகளின் முக்கிய கண்டுபிடிப்புகளையும்,அவர்கள் கணித துறைக்கு ஆற்றிய மாபெரும் பங்களிப்புகளையும் இன்றைய நவீன பேஸ்புக் வடிவத்தில் ஆயிஷா இரா.நடராசன் வார்த்துத் தந்துள்ளார். ரூ.60/-

நத்தைக்கு எத்தனை கால்?

ஆயிஷா இரா.நடராசன் “ஜூனியர் இராமனுஜன்களாகிய100பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார்.கணிதத்தில் மாணவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.” ரூ.45/-

எண்களின் கதை

த.வி.வெங்கடேஸ்வரன் “ஜைர் நதிக்கரையில் கண்டு எடுக்கப்பட்ட இந்த சுமார்20,000ஆயிரம் ஆண்டு பழமையான எலும்பில் மூன்று வரிசை வெட்டுக் கோடுகள் உள்ளன.இந்தக் கோடுகளில் ஒழுங்கும் பாங்கும் தொகுப்பும் தெரிகிறது.எண்களின் வரலாறு,வளர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்நூல்” ரூ.40/-

கணிதமேதை ராமானுஜம்

த.வி.வெங்கடேஸ்வரன் “என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!என் கணவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகத் துல்லியமாக’ரகமி’எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்குப் பழைய நினைவுகள்,என் மாமனார் குடும்பம்,எங்கள் குடும்பத்தின் அத்தனை விஷயங்களும் என் மனத்திரையில் சலனப்படம் போல நினைவுப்படுத்துகின்றது.இந்த நூலை எழுத’ரகமி’எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.” ரூ.120/-