இராணுவமயமாகும் இலங்கை

அ.மார்க்ஸ் 2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இலங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரூ70/-

கரையும் நினைவுகள்

அ.மார்க்ஸ் பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற இந்த மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பா வளர்த்த நாய்கள், சினிமா…சினிமா..கரிச்சன்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், அல்லாவின் அருளால் என இந்த நூலில் உள்ள பல கட்டுரைகள் அ.மார்க்ஸின் பரந்துபட்ட பார்வைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. ரூ.115/-

நிலவில் ஒருவன்

ராஜ்சிவா ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. ரூ.100/-

இறந்த பின்னும் இருக்கிறோமா?

ராஜ்சிவா தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திற்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது. ரூ.120/-

கைமறதியாய் வைத்த நாள்

யுவன் சந்திரசேகர் என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி. ரூ.50/-

நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்

மு. சுயம்புலிங்கம் நவீனத் தமிழ்க் கவிதை தனது வேர்களையும் நிலங்களையும் தேடிச் சென்ற காலகட்டத்தில் மன எழுச்சியூட்டும் நிலக்காட்சிகளையும் வாழ்வியல் சித்திரங்களையும் உருவாக்கியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் பூமியின் வெக்கையையும் கண்ணீரையும் பூச்சுகளற்ற மொழியில் முன்வைத்த சுயம்புலிங்கம் கவிதைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குகின்றன. மக்கள் கவிஞன் என்ற சொல் சுயம்புலிங்கத்தின் வழியே அதன் அசலான அர்த்தத்தை அடைகிறது. ரூ.100/-

உப்பு

ரமேஷ்-பிரேம் எங்கள் மலை பறம்பு எங்கள் நாடு பறம்பு நாடு எங்கள் தலைவன் பாரி எங்கள் கவிஞன் கபிலன் நாம் யார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம். ரூ.60/-

ஒற்றனை தொலைத்த செய்தி.

முனியப்ப ராஜ் முனியப்பராஜ் உற்சாகத்துடன் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களில் ஒருவர். நவீனத் தமிழ்க் கவிதை மரபில் திட்டவட்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் வடிவ நேர்த்தி இவர் கவிதைகளில் இயல்பாக அமைந்திருக்கிறது. கவிஞர் தன்னுடைய யோசனைகளைத் தெளிவாகக் குழப்பங்களுக்கு இடமில்லாத வகையில் முன்வைக்கிறார். கவிதைகளின் ஆரம்பம், முடிவு குறித்த திட்டவட்டமான யோசனைகளும் வரையறைகளும் முனியப்பராஜுவுக்கு இருக்கிறது. கடந்து வந்த உலகம், எதிர்கொள்ளும் உலகம், தன்னால் புரிந்து கொள்ள முடியாத உலகம் என முனியப்பராஜின் இருப்பு இக்கவிதைகளில் இடம்பெறுகிறது. ரூ.40/-

நாகதிசை

ராணி திலக் இயற்கையின் ஜீவிதமே என்னை மையம் கொள்கிறது. வீதி வீசும் சாட்டை என் ஆன்மாவைப் புண்படுத்துகிறது. நெருப்பிலிருந்து மலரைப் பறித்தவன் போல என் துயரமான ஆன்மாவிலிருந்து கனவுகளை,மாய எதார்த்தங்களைப் பறித்து அனைவருக்கும் சூட்டுகிறேன்.(ராணி திலக்) ரூ.40/-