சார்வாகன் கதைகள்

இப்போது, நான் எழுதியிருப்பவற்றையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது ‘அட, நான் இத்தனை எழுதியிருக்கிறேனா?’ என்ற மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி. நான் உண்மையாக ‘எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப் -போலக் குறைந்தபட்சம் நாலைந்து மடங்காவது எழுதிக் -குவித்திருக்கவேண்டும், என் கை விரல்கள் மரத்து மடங்கி-விட வில்லையே! ஆகவே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் எப்போதும் என்னை ஒரு ‘எழுத்தாள’னாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்-கொள்ளவில்லை.வானத்தில் என்றோ ஒருநாள் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் வால்நட்சத்திரம் போன்ற விசித்திரப்பிறவி என்று தான் நான் நினைத்தேன். எனவேதான் போலும், “இது என் குழந்தை!” என்று நான் மார்தட்டித் திரியவுமில்லை. அப்படித் திரியவேண்டும் என்று தோன்றவுமில்லை. – சார்வாகன் ரூ.400/-

அப்பாவின் வேஷ்டி

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். – பிரபஞ்சன் ரூ.200/-

ருசி

பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன். – பிரபஞ்சன் ரூ.180/-

மரி என்ற ஆட்டுக்குட்டி

குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

தபால்காரர் பொண்டாட்டி

அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும். – பிரபஞ்சன் ரூ.180/-

கடைத்தெருக் கதைகள்

நுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றிருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன. – இரா. இளஞ்சேரன் ரூ.130/-

புதிய வாசல்

இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதிய வர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளை தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன். காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்டிருந்தார். சட்டென்று எவராலும் சொல்லமுடியவில்லை. சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால், சென்ற சில வருடங் களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக் கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. – தொகுப்பு: ஜெயமோகன் ரூ.150/-

அக்கா

எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான். – அ.முத்துலிங்கம் ரூ.90/-

காந்தி

எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்-துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்ளாதவர். ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக்கொண்டவர். – அசோகமித்திரன் ரூ.300/-

தக்கையின் மீது நான்கு கண்கள்

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். – சா.கந்தசாமி ரூ.100/-