சுஜாதா பதில்கள் (இரண்டாம் பாகம்)

சுஜாதா சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. ரூ.140/-

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்

சுஜாதா கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? , சாதிகளை ஒழிப்பது எப்படி? , வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா?, முட்டாளை அடையாளம் காண வழி உண்டா?, இறந்தவர்களுடன் பேசமுடியுமா? ,செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்?, நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? ,சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்? ரூ.145/-

சுஜாதா பதில்கள்-3

சுஜாதா சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது. ரூ.80/-

பார்வை 360

சுஜாதா சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகள், தமிழ் சினிமா உலகின் எதார்த்தமான பின்புலங்கள் குறித்த இந்த நூல் கனவுத் தொழிற்சாலையின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமாக விவரிக்கிறது. ரூ.50/-

திரைக்கதை பயிற்சி புத்தகம்

சுஜாதா திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை. ரூ.130/-

திரைக்கதை எழுதுவது எப்படி?

சுஜாதா திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்) ரூ.120/-

புதிய நீதிக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. ரூ.120/-

401 காதல் கவிதைகள்

சுஜாதா தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும். ரூ.190/-

திருக்குறள் புதிய உரை

சுஜாதா திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. ரூ.115/-

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமும்

சுஜாதா பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன். ரூ.300/-