வலையில் விழுந்த வார்த்தைகள்

ச. தமிழ்ச் செல்வன் “பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன் வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி.பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக பண்பாட்டுப் போராளியாகப் பரிணாமம் அடைந்ததை தமிழ்ச்செல்வன் நம்மை ஈர்க்கும் இயல்பான மொழியில் கூறிச் செல்வது ரசனைக்குரியது.வாசிப்பவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்காமல் அவரைத் தனது நெடும் பயணத்தடத்தில் கைகோர்த்து அழைத்துச் செல்வதில்,சகபயணியாக உணரவைப்பதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.அவருடைய எழுத்துகளின் வழியே விரியும் உலகத்தை அரை நூற்றாண்டுத் தமிழ்நில வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் நாம் கணக்கில் கொள்ளலாம்.” ரூ.200/-

என் சக பயணிகள்

ச. தமிழ்ச் செல்வன் “வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். “ ரூ.120/-

சந்தித்தேன் (ஆளுமைகளுடனான நேர்காணல்கள்)

ச. தமிழ்ச் செல்வன் ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான்,பங்கு கொள்கிறான்,எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான். ரூ.60/-

தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

ச. தமிழ்ச் செல்வன் 1940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு. ரூ.10/-

வ.வு.சி யின் சுதேசி கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

ச. தமிழ்ச் செல்வன் பன்னாட்டு மூலதன கம்பெனிகள் நாம் தேசத்தில் நுழைந்து நாம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போக தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகப்த்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்பார்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சி யின் வரலாறு தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச்சொல்லப்படுகிறது.பாராத தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில்1908இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாக தூத்துக்குடி நகர மக்களை வ.வு.சி திரட்டி மக்களுக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது.ஆத்திராமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.வு.சி யைக் கைது செய்கிறது.உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிர்த்தம் செய்து தெருவில் இறங்கினார்.இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது.வ.வு.சிகைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது.பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்க்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.ஒரு முஸ்லிம்,ஒரு பறையர்,ஒரு பூசாரி,ஒரு ரோட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர்.தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாக பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள்.துணி துவைக்க சலவை தொழிலாளிகள் மருகிரர்கல்.துப்புரவு பணியாளர்கள் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுக்கின்றன.தொழிர்சங்கமும் பொதுமக்களும் இரண்டுறக் கலந்து நின்று வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண் முன்னே விரிகிறது. ரூ.15/-

1947

ச. தமிழ்ச் செல்வன் இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்து1947-இந்தியாவிழி தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.அகதிகளானது மட்டுமல்ல துயரம்.மதப் பகைமை மூட்டி வளர்க்கப்ப்ட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன.பல்லாயிரக்கணுக்கானபெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளநாதன் காரணமாக கருவுற்றனர்.கருசிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில்வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம்.வழியில் தொலைந்து போன பெற்றோர்களை தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகனே,என்றும் மகளே,என்றும் அம்மா,என்றும் அப்பா,என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிக்ரமான புத்தகம். ரூ.20/-

அரசியல் எனக்குப் பிடிக்கும்

ச. தமிழ்ச் செல்வன் அரசியல் என்றால் என்ன?அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்?அரசியலின் வரலாறு என்ன?அரசு என்பதன் பொருள் என்ன?இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக்கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன?வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது.விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது.அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்-தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது. ரூ.20/-

Default Title

ச. தமிழ்ச் செல்வன் தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துயரமும் இக்கட்டுரைகளை ரகசிய விசும்பல்களாகவும் ஒரு ரணத்தை அந்தரங்கமாக திறந்து பார்க்கும் செயலாகவும் மாற்றுகின்றன. ரூ.80/-