காற்று கொணர்ந்த கடிதங்கள்

தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.40/-

பேச்சரவம் கேட்டிலையோ

தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன்வைக்கிறார். விவாதங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும் தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் அவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன. மனத்தெளிவும் நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுகளின் வழியே தமிழச்சி ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார். ரூ.100/-

காலமும் கவிதையும்-தமிழச்சியின் படைப்புலகம்

தமிழச்சி தங்கபாண்டியன் தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்கிறது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கௌரவம் அல்ல, அவரது கவிதைக்கு – தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கௌரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணயமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று, கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காகவே என்பதை ‘காலமும் கவிதையும்’ நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும். ரூ.150/-

பாம்படம்

தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நகரமாக இருப்பவை நேற்றைய கிராமங்களே. மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும் நாம் தீண்டாதவையாக மாற்றி வைத்திருக்கிறோம். நகரம் அதற்குரிய இயல்பில் இருக்கிறது. கிராமம் அதற்குரிய ஒழுங்கில் இருக்கிறது. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது நோய்க்கூறு கொண்ட மனங்களின் வெளிப்பாடு. தமிழச்சி, அசலான கிராமத்து மனிதர்களையும், நகரத்து மனிதர்களையும் காட்டுகிறார். கிராமத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்புப் பெயர் இருக்கும். சிறப்புப் பெயர்கள் ஒரு கதையை, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இருக்கும். தமிழச்சி இடத்தைவிட, மனிதர்களைவிட, இடத்திற்கும், மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் கதையை, வரலாற்றை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ், தமிழர்கள், தமிழ் அடையாளம் குறித்த தெளிவை நாம் ‘பாம்பட’த்தின் வழியே அறியலாம். நிலவியல் சார்ந்த விழுமியங்கள்தான் கலாச்சாரம், பண்பாடு என்பது மட்டுமல்ல – நாம் என்பதும். நம்முடைய நிலவியல் சார்ந்த வாழ்வை உற்று நோக்கக் கோருகிறது ‘பாம்படம்’. ரூ.70/-

சொல் தொடும் தூரம்

தமிழச்சி தங்கபாண்டியன் நான், இக்கட்டுரைகளை விமர்சகராக வேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாததன் காரணமாக அழிந்து போயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால் கவனப்படுத்த வேண்டியதைக் கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ள வேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.85/-

மஞ்சணத்தி

தமிழச்சி தங்கபாண்டியன் நகுலனின் ‘சுசீலா’ போலவும், கலாப்ரியாவின் ‘சசி’ போலவும், தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்….. ‘மஞ்சணத்தி மரம்’ போன்ற கவிதைகளில் வரும் ஆற்றல், ஒரு அரூவமான மொழிச்சக்தியாகும். தமிழச்சி ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், ஆங்கிலத் துறையினர் மூலம்தான் ‘மாடர்னிசம்’ அவர்கள் அவர்கள் மொழிகளில் நுழைந்தன. தமிழச்சி கவிதைகள் நேர்மாறாக மாடர்னிசத்தைத் தாண்டி நிற்கின்றன….. தமிழச்சி, தமிழ்க்கவிதை குவலயமயமாகும் தருணத்தில், பிராந்தியத்திலிருந்து ஒரு வனப்பேச்சி உருவாக்கிக்கொண்டு வருகிறார். இதுவும் பின் நவீனத்துவத்தின் கிழக்கத்திய போக்குத்தான். வனப்பேச்சியின் கதகதப்பில் பாவாடை மண்ணில் புரள இளவரசி போல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குட்டிப் பெண் நகரைச் சரணடைந்து, தாயாகி, நகரின் வெறுமையும், நாடு கடந்து தமிழ்ச்சாதி சந்திக்கும் சிறுமையும் கண்டு, தன் ஆதிக் கொள்கைகளைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் கவிதையில் இயங்கிக்கொண்டிருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் மென்மேலும் மெருகேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.190/-