கடைசி டினோசர்

தேவதச்சன் சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் உணர்ச்சிப் பெருக்கின் பாட்டையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தளத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக்கப் படும் அன்றாடக் காட்சிகளின் மூலம் வாசகனுக்குள் புதிர்வெளியின் கிறுகிறுப்பை, அதன் பரவசத்தைத் தொற்றச் செய்பவை. தேவதச்சனின் 137கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு. ரூ.85/-

ஹேம்ஸ் என்னும் காற்று

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று. ரூ.35/-

இரண்டு சூரியன்

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின்மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துருவங்களைக் கலைந்து பிரவேசிக்கிறார்கள். – எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.40/-