பொறுப்பு மிக்க மனிதர்கள்

ஆசிரியர்: மனு ஜோசப் இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது. -டெஹல்கா ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தான் இருக்கின்றோம். -பிஸினஸ் ஸ்டேன்டர்டு. ரூ.250/-

வேர்கள்

அலெக்ஸ் ஹேலி தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் ‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு. 1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. ரூ.999/-

வெண்ணிற இரவுகள்

ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி தாஸ்தோவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். ரூ.70/-

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ரூ.550/-

சிதைவுகள்

சினுவ அச்சிபி தமிழில் : பேரா. ச. வின்சென்ட் 1958 இல் வெளிவந்த  Things Fall Apart (சிதைவுகள்)  சினுவ அச்சிபியுடைய முதல் நாவல்.  இது  உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல்  என்றும் சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று  அழைக்கப்படுகிறார். எளிய  மக்களின்  கதை மொழி நேரடியாக தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக  ஆக்கன்கோ என்னும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது.. ரூ.150/-

1984

ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார். ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: க.நா.சு ரூ.210/-

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

  யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது

லைஃப் ஆஃப் பை

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?”