அம்பேத்கர்(கல்வி சிந்தனை)

ரவிக்குமார் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சனைகள் பற்றி பேசுவதோடு ஒவ்வொரு பல்கலை கழகத்துடன் இணைந்ததாக முதல்தரமான நூல் நிலையம் அமைய வேண்டும் என்னும் பரந்துபட்ட கல்வி பற்றிய ஆய்வு அடங்கிய நூல். ரூ.50/-

சூலகம்:பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம்

ரவிக்குமார் இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்துபட்ட தளத்தில் உருவாக்குகிறார். பெண்ணிய கோட்பாடுகளை தமிழில் உருவாக்குவதிலும் பெண்ணிய எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கும் இவர் இத்தொகுப்பின் வழியே சமகாலப் பெண்களின் துயரங்களுக்கு சாட்சியம் அளிக்கிறார் ரூ.75/-

பிறவழிப் பயணம்

  ரவிக்குமார் ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நானாவதி கமிஷன் என நம்முடைய காலத்தின் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களையும் அவற்றிற்குப் பின்னே இருக்கும் கலாச்சார – அரசியல் பிரச்சினைகளையும் முன்வைக்கும் ரவிக்குமார் தமிழ் இதழியல் வரலாற்றில் தலித்துகளின் இடத்தையும் மொழிப்போர் வரலாற்றில் பிற்படுத்தப்பாட்டோர் பங்கேற்பையும் புதிய வெளிச்சத்தில் ஆராய்கிறார். ரூ.90/-

ஆள்வதன் அரசியல்

ரவிக்குமார் இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார். ரூ.90/-

அண்டை அயல் உலகம்

ரவிக்குமார் சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் ரவிக்குமார், தெற்காசியாவில் பயங்கரவாதம் குறித்த சிக்கல்களை இந்நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். ரூ.90/-

பாப் மார்லி-இசைப்போராளி

ரவிக்குமார் கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவன். பாப் மார்லியின் இந்த இசையும் கவித்துவமும் மிகுந்த வாழ்வை பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது ரவிக்குமாரின் இந்த நூல். ரூ.110/-

மால்கம் எக்ஸ்

ரவிக்குமார் மால்கம் எக்ஸின் வரலாற்றை எழுதுவது என்பது மனித குல விடுதலைக்கான நாயகர்களில் ஒருவரின் வரலாற்றை எழுதுவது என்பதே. கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டம், ஆன்மீகம் என்ற இரண்டு பாதையிலும் அவர் மேற்கொண்ட பயணம் உலகெங்கும் அடையாள அரசியலுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தனது வாழ்வையும் உயிரையும் மால்கம் எக்ஸ் எந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்தாரோ அவை இன்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மக்கள் சமூகத்தின் கனவிலும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது. மால்கம் எக்ஸ் என்ற அந்த விடுதலைக் கனவைக் கண்முன் கொண்டு வருகிறது ரவிக்குமாரின் இந்த நூல். ரூ.100/-

கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்

ரவிக்குமார் கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும் ரவிக்குமார் இந்த நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். சீரான, சமூக நீதியுள்ள கல்வி அமைப்பை உருவாக்குவதில் நம்பிகை கொண்டவர்களோடு இந்த நூல் ஆழமாக உரையாடுகிறது. ரூ.85/-

அவிழும் சொற்கள்

ரவிக்குமார் ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. அந்த வெளிப்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. வழமையான ஆண் மொழியிலிருந்து, அழகியலில் இருந்து விடுபட்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை தோழியாய், சக பயணியாய் புரிந்து கொள்ள வேண்டும் கவிதைகள் இவை. இதன் வரிகளில் இழையோடும் மென்மை ஒரு பூ மலர்வதைப் போல் விரிந்து, அதன் ரகசிய அறைகளை, அடுத்த தலைமுறைக்கான விதைகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது. கனிமொழி ரூ.50/-