ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி

லெனின் இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் லெனின்’ஏகாதிபத்தியம்’ஒரு குறிப்பிடத்தக்க நூல் ஆகும்.அதனுடைய சிறப்பு என்பது அது தொக்குத்தளிக்கும் தகவல்ளாலோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியும் உள்க யுத்தம் பற்றியும் அளிக்கும் சரியான விளக்கத்தாலோ அல்ல.இருபதாம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதிக்கான புரட்சிக்கர மாற்றுத்திட்டத்தை அளித்தத்தின் மூலம் மார்கசியத்தை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான உறுதியான வடிவமைப்பை அளித்திருந்தால் இந்நோல் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ரூ.140/-

கிராமப்புற ஏழைகளுக்கு லெனின்

லெனின் சிறு விவசாயி அதிகாலையில் எழுந்து இரவுவரை உயிரைவிட்டு உழைக்கிறான் என்றால் அவனது வறுமை மற்றும் தேவைகள் தான் அவ்வாறு உழைக்க நிர்பந்திக்கின்றன.இதனைத்தான் எளிமையான வாழ்க்கை லாபகரமான விசாயம் என்றெல்லாம் வானளாவ புகழ்கின்றனர்.அவன் ஒரு ரொட்டித் துண்டை தின்றுவிட்டு வேலைக்குப் போகிறான்.எண்ணி எண்ணி செலவு செய்கிறாள்.ஒரு ஜோடி ஆடை களையே மூன்று வருடம் மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறான்.தகிகும் கோடையில் செருப்பின்றி நடக்கிறான்.உடைந்து போன கலப்பையைக் கயிற்றைக் கட்டி சரி செய்கிறான்.பசுவிற்குக் கூரையிலிருந்து மக்கிப்போன வைக்கோலைப் பிடுங்கி தீனியாகக் கொடுக்கிறான் இதுதான் விவசாயிகள் சிக்கனமாக வாழும் வட்சனம்-லெனின் ரூ.40/-

அரசு

லெனின் அரசு என்பது என்ன?அது எவ்வாறு தோன்றியது?முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது?என்கிற கேள்விகளுக்கு விடையாக1919இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம்.முதலாளித்துவ அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப் பூர்வமாக லெனின் விளக்குகிறார்.வன்முறைகளைப் பயன்படுத்தும்-வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை.அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள்,சமுதாயக் கட்டுப்பாடு,வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ,குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன.சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது.சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது,நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட¢டினி கிடக்கும் நிலை நீடித்திராத பொது,இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம்.இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடியும் புத்தகம் ரூ.10/-

அரசும் புரட்சியும்

லெனின் புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.” ரூ.90/-