இசையின் தனிமை

ஷாஜி ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்து ஷாஜி அறியப்படாத பல உலகங்களை இந்தக் கட்டுரைகளில் திறந்து காட்டுகிறார். வாழ்வுக்கும் கலைக்கும் இடையே நிலவும் அந்தரங்கமான, புரிந்து கொள்ள முடியாத உறவுகளை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இசையோடு நமக்கு இருக்கக்கூடிய மௌனமான தனிமையான உணர்விற்கு ஷாஜி சொற்களை அளிக்கிறார். ரூ.100/-

சொல்லில் அடங்காத இசை

ஷாஜி இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வாழ்வையும் கலையையும் தனது காவியத்தன்மை கொண்ட கவித்துவமான சித்தரிப்பின் மூலம் எழுதிச் செல்லும் ஷாஜியின் இக்கட்டுரைகள் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றன. ரூ.120/-

இசை திரை வாழ்க்கை

ஷாஜி ஷாஜியின் இந்த நூல் நமது காலத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றியும் மறக்க முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. வரலாற்றை உருவாக்கியவர்களைப் பற்றியும் வரலாற்றில் வாழ்பவர்களைப் பற்றியும் விவரிக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜேஷ்கன்னா, பி.பி.ஸ்ரீநிவாஸ், லோஹிததாஸ், சக் பெர்ரி, ஹரிஹரன், மிஷ்கின் போன்ற கலையுலக பிரபலங்களைப் பற்றிய மிக நுட்பமான பார்வைகளை வெளிப்படுத்தும் அதேசமயம் தோல்நோய் மருத்துவர் தம்பையா, அமுல் நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப புரட்சியாளர் ஸ்டீவ் ஜோப்ஸ் போன்றோரைப் பற்றிய அறியப்படாத சித்திரங்களையும் இந்த நூல் வழங்குகிறது. இசை குறித்த ஆழமான பார்வைகள், சினிமா குறித்த நுட்பமான விமர்சனங்கள், சமூகம்-வாழ்க்கை குறித்த புதிய கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என மிகப் பரந்த தளத்தில் விரியும் இந்த நூல் வாழ்வையும் கலையையும் பற்றிய பல புதிய தரிசனங்களை அளிக்கிறது. ஷாஜியின் தேர்ந்த கவித்துவமான நடையும் கூர்ந்த நோக்கும் இந்த நூலை ஒரு புனைகதையைவிடவும் சுவாரசியமான வாசிப்பின்பத்திற்கு உரியதாக்குகிறது. ரூ.170/-