பறம்பு மலையையும் தன் குடிகளையும் நேசித்தும் சுவாசித்தும் ஆட்சி செய்து பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநில மன்னன் பாரி. அவன், வேளிர்குலத் தலைவனானதால் வேள்பாரி. சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும்விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் பாடிப் போற்றினர். பாரியின் புகழ் மீது பொறாமை கொண்டும் பறம்பு மலையின் அரிய பெரிய பொருள்களின் மீது ஆசை கொண்டும் - சேரனும் சோழனும் வெவ்வேறு காலகட்ட...

எந்தத் தன்னலமுமின்றி, தன்னால் இயன்ற உதவியை பொருளாகவோ உடலுழைப்பாகவோ தந்து கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இந்த உலகத்தில் ஆங்காங்கே மனிதம் மலர்ந்துகொண்டிருக்கிறது. சக மனிதன் துயரப்படும்போது, நமக்கென்ன என்று நகர்ந்துபோகாத உதவிக் கரங்கள், இன்னும் ஆங்காங்கே நீண்டுகொண்டுதானிருக்கின்றன. இயற்கைப் பேரிடர், விபத்து போன்ற துயரப் பொழுதுகளில் சக மனிதனைக் காக்க வேண்டும் என்று தன்னியல்பாக முன்வந்து நிற்கும் மனிதர்க...

“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வா...

வெற்றியாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் நாமும் அதுபோல வெற்றிபெற்று புகழ்பெற வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், வெற்றி என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. வெற்றிக்கு தொடர் முயற்சியும் உழைப்பும் இருக்க வேண்டும். உடலை உறுதியாக வைத்திருக்க எப்படி உடற்பயிற்சி தேவையோ அப்படித்தான் மனதுக்கும் பல செயல்கள், சிந்தனைகள் மூலம் பயிற்சியைக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை வலியுறுத்தி ஆனந்த விகடனில்...

'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட...

கலைஞர் கருணாநிதி இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல், மையம் கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், இந்திய அரசியலில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல; அது சரித்திரம். அதைப் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. திரைத்துறையில் வசனகர்த்தா, பாடலாசிரியர், தி...

இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வ...

வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவர்களின் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில். தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்த நாவல், இரண்டு சகோதரர்களையும் அவர்கள் ஏவும் வேலையை ஏனென்று கேட்காமல் செய்து முடிக்க...

இலக்கியமும் வரலாறும் வாழ்வியலோடு தொடர்புடையவை. அவை மறைக்கப்படவில்லை. புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது பல தடங்களின் வழியாக அவை வெளியேறி மீண்டும் செய்தியாக நம் தலைமுறை யினரிடம் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன. காரணம் மனிதனின் மரபு, உணர்வு, வீரம், பழக்க வழக்கம், செயல்பாடு, சிந்தனை என இவற்றோடு பின்னிப்பிணைந்திருப்பதால்... பாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் ...

வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக ...

முகப்பு
/ June 17, 2016

தமிழ்ப் பண்பாட்டுக்கென தனித்துவமான பல்வேறு அடையாளங்கள் உண்டு. இணையம் மூலம் அவற்றை இணைக்கும் முயற்சி இது. கைவினைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கலைப் பொருட்கள், தமிழ் நூல்கள், விதைகள், தானியங்கள், மூலிகைப் பொருட்கள், இயற்கை விவசாயப் பொருட்கள்,  தேன், தமிழ் எழுத்துக்கள் பொரித்த பனியன்கள்   ஆகியவை இந்த மின்னங்காடியில் கிடைக்கும்.

 

இந்தியாவில், ஆர்டர் செய்த 5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஆவன செய்வோம். வெளிநாடுகளுக்கு 10 நாட்கள் ஆகும். நூல்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் தனி. நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவோருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும்.  தமிழ் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்காகவும் இந்த வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Latest Products / புதுவரவு