கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு ஓர் உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன். அசோகமித்திரன் ரூ.120/-

தண்ணீர்

அசோகமித்திரன் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும். ரூ.100/-

ஆகாயத் தாமரை

அசோகமித்திரன் ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது. சா.கந்தசாமி ரூ. 140/-

இன்று

மனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல. ரூ.75/-