தமிழ்ப் பண்பாட்டுக்கென தனித்துவமான பல்வேறு அடையாளங்கள் உண்டு. இணையம் மூலம் அவற்றை இணைக்கும் முயற்சி இது. கைவினைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கலைப் பொருட்கள், தமிழ் நூல்கள், விதைகள், தானியங்கள், மூலிகைப் பொருட்கள், இயற்கை விவசாயப் பொருட்கள், தேன், தமிழ் எழுத்துக்கள் பொரித்த பனியன்கள் ஆகியவை இந்த மின்னங்காடியில் கிடைக்கும்.
இந்தியாவில், ஆர்டர் செய்த 5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஆவன செய்வோம். வெளிநாடுகளுக்கு 10 நாட்கள் ஆகும். நூல்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் தனி. நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவோருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும். தமிழ் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்காகவும் இந்த வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.