வஸந்த் வஸந்த்

சுஜாதா சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று. ரூ.140/-

வண்ணத்துப் பூச்சி வேட்டை

சுஜாதா உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதைச் சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மனநெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார். மிக நுட்பமான சித்தரிப்புகளும் அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல் தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. ரூ.115/-

பேசும் பொம்மைகள்

சுஜாதா இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’. ரூ.180/-

யவனிகா

சுஜாதா சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது. ரூ.125/-

வேணியின் காதலன்

சுஜாதா இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது. ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள். வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தைப் படித்தபின் யோசித்துப் பார்க்கலாம். ரூ.100/-

ஜே.கே

சுஜாதா 1971 ல் எழுதிய இந்தக் கதையின் இறுதியில் வரும் சம்பவம் 1991 ல் இந்திய சரித்திரத்தில் ஏறக்குறைய நடந்துவிட்டது. இதிலிருந்து முழுக்க முழுக்க கற்பனைக் கதை எழுதுவது எத்தனை சிரமம் என்பது புரியும். – சுஜாதா ரூ.85/-

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

சுஜாதா ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை. ரூ.170/-