Description
டாக்டர் பூவண்ணன்
குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் பிடிக்கும். கதையில் வரும் மாயாஜாலங்கள், வேடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது பெரிய கலை. பெரியவர்கள் கதை சொல்லும்போது அதில் நடுநடுவே வாழ்க்கையின் தர்மத்தைத் தேனில் குழைத்து, கொடுப்பது தெரியாமல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாகும்போது குழந்தைக் கதையில் இன்ட்ரஸ்ட் மாறலாம். ஆனால், அதில் வந்த தர்மம் ஆழ் மனதில் தங்கிவிடும். இந்த நூலில் குழந்தைகளுக்காக இரண்டு கதைகளைத் தந்திருக்கிறார் குழந்தை எழுத்தாளரான டாக்டர் பூவண்ணன். முதல் கதையான ஆலம் விழுதில் குருவி தலையில் பனங்காயை வைப்பதைப் போல தன் முழு மாத சம்பளப் பணத்தை சிறுவர்களிடம் கொடுத்து, வீட்டை நிர்வகிக்கச் சொல்கிறார், குடும்பத் தலைவர். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் அனுபவப் பாடங்களையும் தூக்கணாங்குருவி தன் கூட்டைப் பின்னுவதைப் போல அழகாகப் பின்னியிருக்கிறார் நூலாசிரியர். மாணிக்கத் தீவு என்ற இரண்டாவது கதை ராட்சசர்கள் புரியும் மாயாஜாலத்தைப் பற்றியது. ராட்சசர்கள் உயிரை எடுக்க சிறிதும் அஞ்ச மாட்டார்கள். உயிர் போய்விடுமோ என்ற அச்சம்தான் வாழ்
ரூ.50/-
Reviews
There are no reviews yet.