Description
டாக்டர் கே.எம்.செரியன்
இதய நலன் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர், உலகப் புகழ் பெற்ற இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன். முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை, முதல் குழந்தை இதய மாற்று அறுவைசிகிச்சை… என இவரது சாதனைப் பட்டியல் தொடர்கின்றன. இதுவரை 30,000 குழந்தைகளுக்கு இதய நல அறுவைசிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் கே.எம்.செரியன், இந்தியாவில் இந்த சிகிச்சையின் முன்னோடியாகப் போற்றிப் புகழப்படுகிறார். இதய நோய் சம்பந்தமான அத்தனை கேள்விகளுக்கும் எளிமையாகவும் தெளிவாகவும், தான் செய்த இதய மாற்று அறுவைசிகிச்சை அனுபவங்கள் மூலமாக இந்த நூலில் விளக்கமளித்துள்ளார் டாக்டர் கே.எம்.செரியன். இதயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? எத்தனை வயதுவரை இதய அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம்? இதய பை_பாஸ் அறுவைசிகிச்சை அவசியமா? தொற்றுநோய் இதயத்தைத் தாக்குமா? ஹார்ட் அட்டாக், ஹார்ட் ஃபெயிலியர் எதனால் வருகின்றன? இதய ஆரோக்கியத்துக்கு என்ன மாதிரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளலாம்? புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்தை எந்த முறையில் பாதிக்கும்? ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேருவதை எப்படித் தடுப்பது?
ரூ.60/-
Reviews
There are no reviews yet.