Description
வண்ணதாசன்
‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.’ – வண்ணதாசன் வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை முதுபெரும் இலக்கியவாதி தி.க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962&ம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். எதார்த்தமான எழுத்துக்களால் இலக்கிய உலகை ஆளும் வண்ணதாசனின் எழுத்துக்களும் வண்ணமயமானவை. மனிதர்களின் மனதைக் கற்றவர் வண்ணதாசன். அதனால்தான் அவரது எழுத்துக்கள் அழகாக ஜொலிக்கின்றன. இளையதலைமுறை வாசிக்க, வண்ணதாசனின் உயரப் பறத்தல் சிறுகதைத் தொகுப்பு எமது விகடன் பிரசுரம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. வண்ணதாசனின் வண்ணங்களால் ஆன உலகை தரிசிக்க… பக்கத்தைப் புரட்டுங்கள்!
ரூ.90/-
Reviews
There are no reviews yet.