Description
சி.மகேந்திரன்
உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றன. காடுகளும் மலைகளும் பூமியின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. காற்றும் திசை மாறுகிறது… கடலும் பொங்கி எழுகிறது… இப்படி, சூரியக் குடும்பம் தோன்றியதிலிருந்து, தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டே இருக்கிறது இந்த பூமி. இயற்கையாக நடக்கும் எந்தவொரு மாற்றமும் மனிதனைப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழவேண்டிய மனிதன் மட்டும் இயற்கையால் படைக்கப்பட்ட யாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நினைத்து, அதில் மாற்றங்களைச் செய்து பார்க்கிறான். அந்த மாற்றம் எதுவும் நிலைகொள்ளாது என்பதை உணரவும் அவன் மறுக்கின்றான். அப்படி அவன், இயற்கையால் படைக்கப்பட்ட நதியைத்தான் முதலில் மாற்றத்துக்கு உட்படுத்தினான். மலைகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும் நதி பிறக்கிறது. ஆனால், சில நதிகள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதைக் கண்டுகொள்ள இயலாத அளவுக்குக் கண்காணாத இடத்திலிருந்து சிறுசிறு ஊற்றாகப் பிறப்பெடுத்து, ஊர்ந்து, தவழ்ந்து ஓடி வருகின்றன. இப்படி, இயற்கை தன்னைத் தற்காத்துக்கொள்ள பல
ரூ.160/-
Reviews
There are no reviews yet.