Description
ஞாநி
உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம். மக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்தப் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது அவசியம். அந்த வகையில் ஞாநியின் ஓ! பக்கங்கள் கூர்மையான விமர்சனங்கள். நேர்மையான பார்வைகள். கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து விகடன் வாசகர்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஞாநி. ஆனந்த விகடன் வாசகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெளியான ஞாநியின் ஓ! பக்கங்களில் இருந்து வெளிவந்த நூல்களில் இது இரண்டாம் தொகுப்பு. ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஓ! பக்கங்கள் வாசகர்களின் விசேஷ கவனத்தையும் அபிமானத்தையும் பெற்றன. காரணம், எந்த விஷயத்தையும் அவர் பார்க்கும் வித்தியாசமான கோணமும், தன் கருத்தைத் தயக்கமின்றி, வெளிப்படையாக அதே சமயம் நாகரிகமாக அவர் தெரிவிக்கும் அணுகுமுறையும்தான். அதனால்தான் சமூகம், பண்பாடு, அரசியல் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்களுடன் உடன்படாத வாசகர்கள்கூட, ஒரு விஷயத்தில் ஞாநியின் கருத்து எ
ரூ.75/-
Reviews
There are no reviews yet.